சென்னை,
செல்லாத பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 8ந்தேதி இரவு மோடி அறிவிப்புக்கு பிறகு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள், அஞ்சல் அலுவலகங்களில் கொடுத்து, அதற்கு பதிலாக புதிய 2000 ரூபாய் நோட்டு பெற்று சென்றனர். அதற்கான காலக்கெடு நேற்றுடன் (24ந்தேதி)யுடன் முடிவடைந்தது.
rupees
இதற்கான  கால அவகாசம் நீடிக்கப் படவில்லை. இதனால் நேற்று வங்கிகளில் கூட்டம் அலைமோதியது.
இன்று முதல் பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றம் செய்யப்பட முடியாது. ஆனால், வங்கி கணக்கில் டெபாசிட் செய்யலாம்.
இதன் காரணமாக வங்கியில் கணக்கு இல்லாதவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.  அதையடுத்து, பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
 
 
ஆனால் செல்லாத நோட்டுகளை மக்கள் தங்கள் வங்கி கணக்கில் டிசம்பர் 30-ந் தேதி வரை செலுத்த அவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது.
அதன்பிறகும் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் இருந்தால் அவற்றை மார்ச் மாதம் வரை ரிசர்வ் வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்.
இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.