டில்லி:
பொறியியல் படிப்பில் பகவத் கீதை பாடத்தை அறிமுகம் செய்துள்ளது ஏஐசிடிஇ எனப்படும் அகில இந்திய தொழில்நுட்ப குழு. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பொறியியல் படிப்புக்கும், பகவத் கீதைக்கும் என்ன சம்பந்தம் என கேள்வி எழுந்துள்ளது.
அகில இந்திய தொழில்நுட்ப குழு வழிகாட்டுதலின்படி சென்னையில் உள்ள MIT வளாகத்தில் படிக்கும், GEG, ACT, SPP மாணவர்களுக்கு இந்தாண்டு முதல் தத்துவவியல் பாடம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
இதில் பகவத் கீதை குறித்த பாடம் இடம் பெற்றுள்ளது. இந்த ஆண்டில் 3 ஆவது செமஸ்டரில் மாணவர்கள் இந்த பாடங்களை கட்டாயம் படிக்க வேண்டும் என்றும், இதில் வாரத்திற்கு 3 வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்பில் தத்துவவியல் பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது மாணவர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.