நியூயார்க்:
சகிப்பு தன்மை இல்லாமை மற்றும் வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றால் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி கேள்விகுறியாகியுள்ளது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கூறினார்.
கடந்த 2 வாரங்களாக ராகுல்காந்தி அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்டு பேசி வரும் அவர் அங்கு இந்திய மற்றும் தெற்காசிய வல்லுனர்கள் கலந்து வட்ட மேஜை கூட்டத்தில் பேசினார்.
இதில் அமெரிக்கா முன்னேற்றத்திற்கான மைய தலைவர் நீரா தண்டன், அமெரிக்காவுக்கான முன்னாள் இ ந்திய தூதர் ரிச்சர்டு வெர்மா, ஹிலாரி கிளிண்டனில் பிரச்சார ஆலோசகர் ஜான் பொடெஸா உள்ளிட்டோர் கலந்துகொண்டவர்களில் முக்கியமானவர்கள்.
மேலும், வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு குழுவின் தெற்காசிய பிரிவு தலைவர் லிசா குர்டிஸ் ரா குல்காந்தியுடன் காலை உணவு அருந்தினார். அப்போது அமெரிக்கா&இந்தியா உறவு மற்றும் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் மற்றும் தொற்காசியாவின் அமெரிக்க அதிபர் டிரம்பின் கொள்கை குறித்து இருவரும் தீவிரமாக விவாதித்தனர்.
அமெரிக்கா&இந்தியா வர்த்தக குழு நடத்திய நிகழ்ச்சியில் அமெரிக்காவின் சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவர் மற்றும் சிஇஓ தாமஸ் னே டோஷஹே ராகுலை சந்தித்தார். இதில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கல ந்துகொண்டனர். அப்போது இந்தியாவில் வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசு தவறி விட்டது. இதனால் நாடு அபாயகரமான சூழ்நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று ராகுல் காந்தி வருத்தத்துடன் தெரிவித்தார்.
மேலும், வாஷிங்டன் போஸ்ட் செய்தி பிரிவினரும் ராகுல் அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பை நடத்தினார். அப்போது உலகம் முழுவதும், குறிப்பாக இந்தியாவில் சகிப்பு தன்மை இல்லாதது குறித்து பகிர்ந்து கெ £ண்டார். இதை தொடர்ந்து குடியரசு கட்சியின் மூளையாக செயல்படும் புனிட் அலுவாலியா மற்றும் அமெரிக்காவில் வெளிநாட்டு கொள்கை மையம் நடத்திய ஒரு கூட்டத்தில் ராகுல் கலந்தகொண்டார்.
அப்போது அலுவாலியா பேசுகையில், ‘‘அடி வேர் பிரச்னைகளை அறிந்திருக்க கூடிய தலைவராக ராகுல் உள்ளார். ஒவ்வொரு கூட்ட முடிவிலும் ஆக்கப்பூர்வ விவாதங்களை அவர் மேற்கொண்டு வருவதாக அதில் கலந்துகொண்டவர்கள் தெரிவிக்கின்றனர்’’ என்றார்.
இதைதொடர்ந்து விர்ஜினியா கவர்னர் டெரி மெக்ஆலிஃபி சந்தித்து பேசினார். அனைத்து கூட்டங்களிலும் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் சகிப்பு தன்மை இல்லாமை இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது என்ற ராகுலின் கருத்தை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
ராகுலுடன் அனைத்து கூட்டங்களிலும் கலந்துகொண்ட சாம் பிட்ரோடா என்பவர் கூறுகையில், ‘‘ராகுல் அனைத்து பிரச்னைகளையும் புரிந்து வைத்துள்ளார். அவர் மீது கூறப்பட்டு வரும் தவறான கருத்துக்களுக்கு எதிராக அவர் அமைந்துள்ளார். ராகுலின் எதிராளிகள் அவரை எதிர்மறையான நபர் என்ற தோற்றத்தை உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அவரது விவாதங்கள் மாவட்டம் வாரியாக மேற்கொள்ளப்பட வேண்டும். ’’ என்றார்.