ஆஸ்திரேலியா : சீக்கிய மாணவனுக்கு பள்ளியில் தலைப்பாகை கட்டிக்கொள்ள அனுமதி!

Must read

மெல்போர்ன்

ஸ்திரேலியாவில் ஒரு  கிறுத்துவப் பள்ளியில் சீக்கியப் பெற்றோர் தங்கள் மகன் தலைப்பாகை கட்டிக் கொள்ள வழக்கு போட்டு வென்றுள்ளனர்.

ஆஸ்திரேலியா நாட்டில் மெல்போர்ன் நகரில் வசிப்பவர் சகர்தீப் சிங் அரோரா.  இவர் மனைவி அனுரீத்.  இவர்களின் ஐந்து வயது மகன் சிதக் சிங் அரோரா  இங்குள்ள மெல்டன் கிறிஸ்டியன் காலேஜ் பள்ளி என்னும் பள்ளியில் படித்து வருகிறார்.  இப்போது தான் இந்தப் பள்ளியில் சேர்ந்துள்ளார்.  இந்தப் பள்ளியில் அவர் சீக்கிய முறைப்படி பட்கா என அழைக்கப்படும் குழந்தைகளுக்கான தலைப்பாகை அணிந்து வர தடை விதிக்கப்பட்டது.   அதற்கு மத அடையாளம் காட்டும் எதையும் அணியக் கூடாது என காரணமும் சொல்லப்பட்டது.

சிதக் சிங் பெற்றோர்கள்   இது தங்களின் சம உரிமையை பறிப்பதாகவும்,   பள்ளியில் சேர்க்கும்போது அப்படி கட்டுப்பாடு இருப்பதாக சொல்லவில்லை என்றும் கூறி வழக்கு தொடர்ந்தனர்.  இதை விசாரித்த விக்டோரியன் சிவில் அண்ட் அட்மினிஸ்ட்ரேடிவ் டிரிப்யூனல்  பெற்றோருக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது.

தீர்ப்பில், “அந்தப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளில் பாதிக்கும் மேல் உள்ளவர்கள் எந்த ஒரு மதத்தையும் பின் பற்றாதவர்கள்.  அத்துடன் பள்ளியில் கிறிஸ்துவர்கள் அல்லாதோரிடம் தங்களின் மத சின்னங்களை அணியக் கூடாது என சொல்வது அவர்களின் உரிமையைப் பறிப்பதாகும்.   ஒரு கிறிஸ்துவ நாட்டில் மற்றா மதங்களின் சின்னங்களை அணியக்கூடாது என சொல்வது கிறிஸ்துவ மதத்தை மட்டுமே அனைவரும் பின்பற்றா வேண்டும் என சொல்வதாகும்.   எனவே பள்ளி அனுமதிக்கும் நிறத்தில் சிதக் சிங் தலைப்பாகை அணிந்து செல்லலாம்” என தீர்ப்பளித்துள்ளது.

More articles

Latest article