டில்லி:
ப்போது இந்த செய்தியை படித்துக்கொண்டிருக்கும் உங்களால், இந்தியாவிலேயே இரண்டாமிடத்தைப் பிடித்திருக்கிறது தமிழகம்!
ஆம்.. இணையதள பயன்பாட்டில் இந்தியாவிலேயே இரண்டாம் இடம் தமிழகத்துக்குத்தான்!
00
ஒரு காலத்தில் மெயில் அனுப்ப,பெற மட்டுமே பொது மக்கள் இணையத்தை பயன்படுத்தி வந்தார்கள். நாளடைவில் புதிய புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
செல்போனிலேயே இணையத்தைப் பயன்படுத்தும் வசதி வந்த பிறகு இணைய பயன்பாடு அதிகரித்துள்ளது.  சமூகவலைதளம் எனப்படும் பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப்களில் மக்கள் அதிக விருப்பம்  உள்ளவராக இருக்கிறார்கள். வாட்ஸ் அப்  பரஸ்பரம் பேசிக்கொள்வது அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இணைய பயன்பாடு பற்றி இந்தியா முழுதும் ஒரு சர்வே எடுக்கப்பட்டது.
இதில் மகராஷ்டிரா முதல் இடத்திலும் தமிழகம் இரண்டாம் இடத்திலும் இருப்பது தெரியவந்திருக்கிறது.
நாட்டிலேயே மிகக் குறைவாக இணையத்தை பயன்படுத்துபவர்கள் இமாச்சல பிரதேச மக்கள்.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிபர அறிக்கையின்படி, இந்த ஆண்டின் மார்ச் மாதம் வரை இந்தியாவில் 342.65 மில்லியன் பேர் இணையதள சேவையை பயன்படுத்தி உள்ளனர். மகாராஷ்டிராவில் நாட்டிலேயே அதிகபட்சமாக 29.47 மில்லியன் பேர் இணையதள சேவையை பயன்படுத்தி உள்ளார்கள்.
அடுத்த இடத்தில் இருக்கும் தமிழகத்தில் 28.01 மில்லியன், ஆந்திரா – 24.87 மில்லியன், கர்நாடகா – 22.63 மில்லியன் ஆகும். மிக குறைந்தபட்சமாக இமாச்சல பிரதேசத்தில் 3.02 மில்லியன் பேர் இணையதள சேவையை பயன்படுத்துகிறார்கள் என்று, மத்திய அரசின் அறிக்கை தெரிவிக்கிறது.