இம்பால்
மணிப்பூர் மாநிலத்தில் இணைய தள சேவைத் தடை சில நிபந்தனைகளுடன் நீக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 3 ஆம் தேதி மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே கலவரம் மூண்டது. சுமார் 100 பேர் பலியானார்கள். மேலும். மோதலைத் தூண்டும் வகையில் சமூக வலைத் தளங்களில் வதந்தி பரப்பப்படுவதைத் தடுக்க மே 3-ம் தேதி இணையதள சேவைக்குத் தடை விதிக்கப்பட்டது.
அங்கு தொடரும் கலவரத்தினால் இணையதள சேவைக்கான தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது சமீபத்தில் மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் செல்வது போன்ற வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது மணிப்பூரில் இணையதள சேவைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இணையதள சேவை நிபந்தனைகளுடன் தடை நீக்கப்பட்டுள்ளது ஆனால் மொபைல் போனில் இணையதள சேவைக்கான தடை தொடர்கிறது என அரசு தெரிவித்துள்ளது.