இம்பால்
மீண்டும் மணிப்பூரில் பதட்டம் ஏற்பட்டுள்ளதால் இணைய சேவை துண்டிக்க[ப்பட்டுள்ளது

கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் முதல்ம ணிப்பூர் மாநிலத்தில் மெய்தி – குகி இனக்குழுக்களுக்கு இடையே மோதல் வெடித்துள்ளதால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். வன்முறையை கட்டுப்படுத்த தவறியதற்காக முதல்வர் பைரன் சிங் பதவி விலகியதையடுத்து, அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது அமைதி திரும்பியுள்ளது.
நேற்றிரவு, மெய்தி இனத்தை சேர்ந்த அரம்பாய் தெங்கோல் என்ற குழுவின் தலைவர் கண்ணன் சிங் உள்பட 6 பேரை மணிப்பூர் போலீசார் கைது செய்தனர். இந்த கைதை எதிர்த்து மெய்தி மக்கள் போராட்டம், வன்முறையில் ஈடுபட்டனர். வன்முறையை தடுக்க பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டதால், மணிப்பூரில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணிப்பூரில் 5 மாவட்டங்களில் இணையதள சேவை நேற்று இரவு 11.45 மணி முதல் துண்டிக்கப்பட்டுள்ளது. அதாவது மேற்கு இம்பால், கிழக்கு இம்பால், தவுபல், பிஷ்ணுபூர், காக்சிங் ஆகிய 5 மாநிலங்களில் 5 நாட்களுக்கு இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.ஃப்ச்ன் இந்த 5 மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது.