சென்னை:
தமிழ்நாட்டில் முதல் முறையாக மாமல்லபுரத்தில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் முதல் முறையாக மாமல்லபுரத்தில், வரும் 13-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை சர்வதேச பட்டம் விடும் திருவிழா நடைபெற உள்ளது.
தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்தின் சார்பில் நடத்தப்படும் இந்த திருவிழாவில் அமெரிக்கா, தாய்லாந்து, உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குழுக்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த திருவிழாவில் பல்வேறு விலங்குகள், மீன்கள், பறவைகள் போன்றவை பலூன் வடிவில் பட்டங்களாக பறக்கவிடப்பட உள்ளன. சுற்றுலா துறைக்கு சொந்தமான கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் நடைபெறும் இந்த விழாவுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமாக விறக்கப்படுகின்றன.
இந்த பட்டம் விடும் திருவிழாவில் அனைத்து வயதினரும் பங்கேற்களலாம் எனக் கூறப்படும் நிலையில், பெரியவர்களுக்கு ரூ. 150 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திருவிழாவின்போது இசைக்கச்சேரிகள், உணவு திருவிழா போன்றவையும் நடைபெறும் எனவும், பொதுமக்களுக்கு இது சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக திகழும் எனவும் சுற்றுலாதுறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.