டில்லி

மிக்ரான் அச்சுறுத்தலால் வெளிநாடுகளுக்கான விமான சேவை ரத்து ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் முதல் கொரோனா பரவல் காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.   அதே வேளையில் வெளிநாடு வாழ் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானங்கள் மற்றும் வர்த்தக போக்குவரத்துக்கு மட்டுமே விமான சேவை மட்டுமே இயங்கியது.    பிறகு கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததால் விமான சேவை சில நாடுகளுக்கு மட்டும் தொடங்கப்பட்டது.

பரவல் மேலும் குறைந்ததால் டிசம்பர் 15 முதல் வழக்கமான சர்வதேச விமான போக்குவரத்து சேவையைத் தொடங்க மத்திய அரசால் முடிவு எடுக்கப்பட்டது.  ஆனால் தென் ஆப்ரிக்காவில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸான ஒமிக்ரான்  பரவல் கண்டறியப்பட்டது.  இந்த ஒமிக்ரான் வைரஸ் அடுத்தடுத்து பல உலக நாடுகளில் பரவியது.

தற்போது இந்தியா, ஜிபாப்வே, இஸ்ரேல், ஜப்பான், சீனா, மொரிஷியஸ், இங்கிலாந்து என சுமார் 30 நாடுகளில் ஒமிக்ரான் பரவி உள்ளது.  இதனால் பல உலக நாடுகள் எல்லைகளை மூடி வெளிநாட்டுப் பயணிகளுக்குத் தடை விதித்துள்ளன.    இதனால் விமான போக்குவரத்துத் துறை சர்வதேச பயணிகள் விமானச் சேவையை ரத்து செய்தது.   இந்த ரத்து  தற்போது ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.