சென்னை:
ர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின வாழ்த்துச் செய்தியில்,  ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3-ம் நாள் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில்  அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுகின்ற விருதுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மாற்றுத் திறனாளிகள் சிறப்பாகச் செயல்புரிந்தமைக்காக குடியரசுத் தலைவரிடம்  விருது பெறுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ள அவர், மாற்றுத்திறனாளிகளின் உயர்வினை மேம்படுத்தும் வகையில், அவர்களது கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அதிகம் கவனம் செலுத்தி பல்வேறு  நலத்திட்டங்களை முன்னெடுத்து அவர்களின் வாழ்வு செழிக்க இந்த அரசு முனைப்புடன் செயல்படும் என்று உறுதியளித்துள்ளார்.