சர்வதேச குற்றவியல் நீதிமன்ற (ICC) அதிகாரிகளுக்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் டொனால்ட் டிரம்ப் நேற்று கையெழுத்திட்டுள்ளார்.
நவம்பர் மாதம் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு கைது வாரண்ட் பிறப்பித்தபோது ICC கடுமையான எதிர்வினையைத் தூண்டிய நிலையில் டிரம்ப் இந்த உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க குடிமக்கள் அல்லது இஸ்ரேல் போன்ற நட்பு நாடுகளின் மீதான ICC விசாரணைகளில் உதவிய தனிநபர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மீது இது நிதி மற்றும் விசா தடைகளை விதிக்கிறது.
அமெரிக்க பயணத் தடை மற்றும் நிதித் தடைகளால் எந்த அதிகாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைக் குறிப்பிடவில்லை.
அமெரிக்க அதிபர் டிரம்ப் ICC அதிகாரிகளுக்கு தடை விதிக்கக்கூடும் என்று ஜனவரி மாதம் தகவல் வெளியானது.
இந்த நிலையில் ICC அதிகாரிகளுக்கு தடை விதித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவில் தடை செய்யப்படும் எந்த நபர்களின் பெயர்களும் குறிப்பிடப்படவில்லை என்றாலும், அமெரிக்க அல்லது இஸ்ரேலிய குடிமக்களை விசாரித்த அல்லது வழக்குத் தொடர்ந்த ஐ.சி.சி அதிகாரிகள் தங்கள் நாட்டிலிருந்து தடை செய்யப்படுவார்கள், மேலும் அவர்களின் சொத்துக்கள் முடக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு அந்த அதிகாரிகளின் “உடனடி குடும்ப உறுப்பினர்களுக்கும்” பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.