
மெல்போர்னில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதுக்கு காவ்யா மாதவன் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பிரபல கேரள பட இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் திலீப்- காவ்யா மாதவன் நடித்த படம் ’பின்னேயும்’.
இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக, காவ்யா மாதவன் பெயர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டி ருக்கிறது. மேலும், அலியா பட், வித்யா பாலன் ஆகிய நடிகைகளும் போட்டியில் உள்ளனர்.
ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி முதல் 22 ம் தேதி வரை இந்தப் பட விழா நடைபெறவுள்ளது.
நடிகை பாவனா பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பபட்டுள்ள, நடிகர் திலிப்புடன், அவரது மனைவியான காவ்யா மாதவனும் தற்போது தலைமறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel