சென்னை:

சென்னை பச்சையப்பன் அறக்கட்டளையின் 4 கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

யுஜிசி விதிமுறையை பின்பற்றாமல் முதல்வர்கள் நியமிக்கப்படுவதாக பேராசிரியர்கள் ஸ்ரீதர், கருணாமூர்த்தி ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வரும் 30-ம் தேதி வரை முதல்வர்களை நியமிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.