சென்னை: இடைக்கால பட்ஜெட் குறித்து இன்று முதல் சட்டமன்றத்தில் விவாதம் நடைபெறுகிறது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல், இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் இன்று முதல் பிப்ரவரி 20 ஆம் தேதி வரை சபாநாயகர் அப்பாவு தலைமையில் சட்டமன்றத்தில் நடைபெற இருக்கிறது.

தமிழ்நாடு அரசின் 2026 – 2027 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (பிப்ரவரி 17 ஆம் தேதி) தாக்கல் செய்தார். இதையடுத்து வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இடைக்கால பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பிறகு அவையின் நிகழ்ச்சிகள் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம், சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது.
சட்டமன்ற கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும்? என்னென்ன அலுவல்கள் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்? என்பது தொடர்பான ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து நேற்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம், இன்று (பிப்ரவரி 18 ஆம் தேதி) முதல் சட்டமன்றத்தில் நடைபெற உள்ளது.
அதன்படி, இன்றுமுதல் பிப்ரவரி 20 ஆம் தேதி வரை சட்டமன்றத்தில் விவாதம் நடைபெற இருக்கிறது. பட்ஜெட் மீதான விவாதத்தின் முடிவாக இறுதி நாளில் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னார்செல்வம் ஆகியோர் அது குறித்து உரையாற்றுவார்கள். மேலும், 2026 – 2027 ஆம் ஆண்டிற்கான முன்பண கோரிக்கைகளும், 2025 – 2026 ஆம் ஆண்டிற்கான கூடுதல் செலவினங்களுக்கான மானிய கோரிக்கைகளும் அன்றே நிறைவேற்றப்படும்.
இது தொடர்பான அறிவிப்பை சபாநாயகர் அப்பாவு, நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்து இருந்தார். அப்போது அவர், இது குறித்த விவாதங்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு நடைபெறும். எதிர்க்கட்சித் தலைவரின் நேரலை துண்டிக்கப்படுவதாகக் கூறப்படும் புகாரில் உண்மையில்லை என்று விளக்கம் அளித்து இருந்தார்.
[youtube-feed feed=1]