சென்னை: தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்2021-22ல், தமிழக உயர்கல்விதுறைக்கு ரூ.1932.19 கோடியும், பள்ளிக்கல்வித் துறைக்கு 34,181 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2021-2022-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் காலை 11 மணிக்கு சட்டசபை கூடியது. இதில் துணை முதல்-அமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2021-2022-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். இதில், பல்வேறு துறைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்து அறிவித்து வருகிறார். மேலும் புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார்.
இந்த நிதிநிலை அறிக்கையில், பள்ளிக்கல்வித்துறைக்கு 34,181 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணிப்பொறி அறிவியல் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உயர்கல்வி உதவித்தொகை திட்டத்திற்காக இடைக்கால பட்ஜெட்டில் ரூ.1932.19 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் டோரண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க நிதியுதவி செய்துள்ளோம்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்காக ரூ.229.37 கோடி ஒதுக்கீடு
மதிய சத்துணவுத் திட்டத்திற்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.1953.98 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
ஆதிதிராவிடர் நலத்துறைக்கு 1,932 கோடி ரூபாய் ஒதுக்கீடு மற்றும் ஆதி திராவிடர் சிறப்புக் கூறுகள் திட்டத்திற்காக ரூ.13,967.58 கோடி ஒதுக்கீடு
பழங்குடியினர் துணைத் திட்டத்திற்காக ரூ.1276.24 கோடி ஒதுக்கீடு
அத்துடன் சமூக நலத்துறைக்கு 1,953 கோடி ரூபாய் ஒதுக்கீடு.