ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் அமரன்.

ராஜ்குமார் பெரியசாமி இயக்க, ஜி.வி. பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31ஆம் தேதி திரைக்கு வர தயாராக உள்ளது.

பணியின் போது வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட “அமரன்” படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் இன்று மாலை நடைபெற்றது.

அமரன் திரைப்படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் பேசும் போது,

அமரன் படத்தின் டைட்டில் கார்த்திக் அவர்களிடம் இருந்தது. அவர் அமரன்-2 என்னும் படத்தை கௌதம் கார்த்திக்கை வைத்து எடுப்பதாக இருந்தார். இந்தப் படத்தின் கதையைக் கேட்டதும், இந்த டைட்டில் இந்த படத்திற்கு தான் பொருத்தம் என்று எங்களுக்கு வழங்கினார்.

இந்தப் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி அவர்கள் பிக் பாஸ் ஷோ வில் டைரக்டராக இருந்தார். பிக் பாஸ் போலவே 100 நாட்கள் என்னை காஷ்மீருக்கு அழைத்துச் சென்று இந்த படத்தை முடித்தார்.

இந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் உடன் இன்னொரு முக்கியமான படத்தில் இணைய போகிறேன் என்றார்.