மும்பை:

4 நாடுகள் இடையிலான கால்பந்து போட்டி முப்பையில் நடைபெற்று வருகிறது. இதில்  5 கோல்கள் அடித்து இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்தியா, கென்யா, சீனதைபே, நியூசிலாந்து ஆகிய 4 நாடுகள் இடையிலான கால்பந்து போட்டி மும்பையில் தொடங்கியது.

நேற்று நடைபெற்ற  தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் சீன தைபே அணியை தோற்கடித்தது.

இந்திய அணி தரப்பில் கேப்டன் சுனில் சேத்ரி 3 கோல்களை அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்தார். உதான்டா சிங் மற்றும் பிரனாய் ஹால்டெர் தலா ஒரு கோல் அடித்தனர். சீன தைபே அணியால் கடைசி வரை கோல் அடிக்க முடியாததால், இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இன்டர்கான்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியாவில் நடைபெறுகிறது. இதில், இந்தியா,  சீன தைபே, கென்யா, நியூசிலாந்து உள்பட நான்கு நாடுகளைச் சேர்ந்த அணிகள் கலந்துகொண்டுள்ளது.

இந்தப் போட்டியானது, ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தயாராகி வரும் இந்திய அணிக்கான ஒரு சோதனை போட்டியாக கருதப்படுகிறது.

வரும் 10-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டி தொடரில் தென்னாபிரிக்கா கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.