சென்னை:
சென்னையில் நாளை முதல் தீவிர தூய்மைப் பணி துவங்கப்பட உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
சென்னையில் கடந்த மாதத்தில் பெய்த தொடர் கனமழையால் ஏற்பட்ட கழிவுகள் மற்றும் நீண்ட நாட்களாகத் தேங்கிக் கிடக்கும் குப்பைகள், கட்டடக் கழிவுகளை அகற்றும் தீவிர தூய்மைப் பணிகள் நாளை தொடங்கி ஐந்து நாட்களுக்கு நடைபெறவுள்ளன.
கடந்த மாதத்தில் பெய்த கனமழையால் சென்னை நகரில் பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி நெகிழி கழிவுகள், கட்டுமான கழிவுகள் ஆங்காங்கே சேர்ந்தன. தண்ணீர் செல்ல ஏதுவாக மழைநீர் வடிகால் அடைப்புகள் நீக்கப்பட்ட நிலையில், நாளை முதல் 5 நாட்களுக்குச் சென்னையில் தீவிர தூய்மைப் பணி மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.