சென்னை:
மிழகத்தில் நாளை முதல் மழையின் தீவிரம் படிப்படியாக குறையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 29ம் தேதி தொடங்கியது. இதையடுத்து வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நிலப்பகுதியை அடைந்ததையடுத்து வலுவிழந்து காணப்படுகிறது. இதனால், பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் நாளை முதல் மழையின் தீவிரம் படிப்படியாக குறையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்த நிலையில், மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவத்து உள்ளது. இதன் காரணமாக, 16-ஆம் தேதிக்கு பிறகு ஒரு வாரம் கன மழைக்கு வாயப்பு உள்ளது என்று தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.