சென்னை: பிரபலமான தஞ்சாவூர் தட்டுக்கு அறிவுசார் சொத்துரிமைக்கான தேசிய விருது கிடைத்துள்ளதாக தமிழகஅரசு தெரிவித்து உள்ளது.
தஞ்சாவூர் கலைத்தட்டு, தஞ்சாவூர் வீணை, தஞ்சாவூர் ஓவியம், நாச்சியார் கோவில் குத்துவிளக்கு, சுவாமிமலை வெண்கலசிலைகளுக்கு கடந்த 2015ம் ஆண்டு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது தஞ்சாவூர் தட்டுக்கு அறிவுசார் சொத்துரிமைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக அரசு நோடல் அதிகாரி சஞ்சய் காந்தி, இயற்கை பொருட்கள், உற்பத்தி பொருட்கள் என 5 வகையான பொருட்களில் தனித்தனியாக தேசிய விருது கிடைத்துள்ளது. அதில், கைவினை பொருளான தஞ்சாவூர் தட்டும் ஒன்று, தஞ்சாவூர் தட்டுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது என கூறினார்.