புதுடெல்லி:
பாகிஸ்தானுக்கு இருப்பிடத்தை மாற்றிக் கொண்ட ஜெய்ஸி இ முகமது இயக்க தீவிரவாதிகளின் நடவடிக்கையை புலனாய்வுத் துறையினர் சரியாக கணித்து கூறியதாலேயே, விமானப்படை கச்சிதமாக கடமையை முடித்து விட்டு திரும்பியிருக்கிறது.
பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமா தாக்குதலுக்குப் பின், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்த ஜெய்ஸ் இ முகமது தீவிரவாதிகள், தங்கள் முகாமை உடனே பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் உள்ள மலைப்பகுதிக்கு மாற்றிக் கொண்டனர்.
காஷ்மீர் ஆக்கிரமிப்பு பகுதியிலேயே இந்தியா தாக்குதல் நடத்தும் என்ற அவர்கள் கணிப்பு பொய்யாகிப் போனது.
இதே கணிப்போடு தான் பாகிஸ்தானும் இருந்திருக்கிறது. அதிகாலை 3.30 மணி அளவில் ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத பயிற்சி முகாமை விமானப் படை தகர்த்துள்ளது.
இதில் 300-க்கும் மேற்பட்ட தீவிரவாத பயிற்சி பெறும் இளைஞர்கள் பலியானார்கள். முகாமும் தரைமட்டமாக்கப்பட்டது.
இந்த தாக்குதலை பாகிஸ்தானும் எதிர்பார்க்கவில்லை. நமது புலனாய்வு அமைப்புகளின் சரியான கணிப்பும் இந்த பதிலடி கொடுப்பதற்கு முக்கிய காரணமாக இருந்திருக்கிறது.