தயாரிப்பு நிலையங்களில் இருந்து மருத்துவமனையில் நோயாளிக்கு செலுத்தப்படும் வரையிலான ஒரு தடுப்பு மருந்தின் பயணம் மற்றும் நோக்கம், குளிர்சாதன சேமிப்பு வசதி இல்லாமல் இருக்கும் பல கிளினிக்குகளில் தடைபடுகிறது.   ஏனெனில், தொழிற்சாலையில் இருந்து மருத்துவமனையில் செலுத்தப்படும் வரை இந்த தடுப்பு மருந்துகள் இடைவெளியில்லாத குளிரூட்டும் சேமிப்பு வசதியில் இருக்க வேண்டியது மிகவும் முக்கியம் ஆகும். ஆனால், பல வளரும் நாடுகளில் குறிப்பாக, உலகின் 7.8 பில்லியன் மக்களில் கிட்டத்தட்ட 3 பில்லியன் மக்கள் இந்த வசதி இல்லாத/கிடைக்காத நிலையில் உள்ளனர். அங்கு COVID-19 ஐ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான நோய்த்தடுப்பு செயல்பாடுகளை மேற்கொள்ள தேவையான வெப்பநிலை கட்டுபாட்டு வசதிகள் இல்லை.  விளைவு: வைரஸ் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உலகெங்கிலும் உள்ள ஏழை மக்களுக்கு  அதிலிருந்து மீளும் வாய்ப்புகள் வெகு கடைசியாக கிடைக்க கூடும்.

Stirling Ultracold ULT25NEU Deployable Unit

பொதுமக்களை கொரோனவில் இருந்து மீட்கும் முயற்சிகளில், தடுப்பு மருந்து குளிர்சாதன சேமிப்பு வசதி பற்றாக்குறை என்பது தற்போதைய, சமீபத்தில் கவனத்தில் வந்த தடைகளில் ஒன்று.  ஆனால் ஏற்கனவே பெரும்பாலான வளரும் மற்றும் ஏழை நாடுகளில் கூட்டம் மற்றும் நெரிசல் மிக்க பகுதிகளில் வசிப்பது, வேலை பார்ப்பது, COVID-19 சிகிச்சைக்கு இன்றியமையாத மருத்துவ ஆக்ஸிஜன் பெறும் வசதி இல்லாமை, பெரிய அளவிலான சோதனைகளை மேற்கொள்ள ஆய்வகங்கள், ஆய்வக பொருட்கள் அல்லது தொழில்நுட்ப வல்லுநர்கள் இல்லாத சுகாதார அமைப்புகள், அவற்றின் பற்றாக்குறை என பல்வேறு தடைகளை ஏற்கனவே எதிர்கொண்டுள்ளனர். கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் தொழிற்சாலை முதல் மருத்துவமனை வரையிலான குளிர்சாதன சேமிப்பு வசதியை தொடர்ச்சியாக பராமரிப்பது பணக்கார நாடுகளில் கூட எளிதானது அல்ல. அதிலும் குறிப்பாக மைனஸ் 70 டிகிரி செல்சியஸ் (மைனஸ் 94 எஃப்) அல்ட்ராகோல்ட் வெப்பநிலை தேவைப்படும் நாடுகளுக்கு இன்னும் கடினம். வைரஸ் காரணமாக இந்த ஆண்டு தடுப்பு மருந்து தயாரிப்பு எட்டியுள்ள அசுர வேக பாய்ச்சலுடன் ஒப்பிடும்போது, உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் குளிரூட்டும் தொழில்நுட்பத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முதலீடு மிகவும் பின்தங்கியிருக்கிறது.

தீவிர தொற்று நோய் பரவல் அதன் ஒன்பதாவது மாதத்தில் அடியெடுத்து வைத்துள்ள இந்த நிலையிலும், தளவாடங்கள்  வல்லுநர்கள் உலகின் பெரும்பாலான பகுதிகளில் ஒரு பயனுள்ள தடுப்பு மருந்து திட்டத்தை நிர்வகிக்க போதுமான குளிரூட்டல் சேமிப்பு வசதி இல்லை என்று எச்சரிக்கின்றனர். இதில் மத்திய ஆசியாவின் பெரும்பகுதி, இந்தியாவின் பெரும்பகுதி மற்றும் தென்கிழக்கு ஆசியா, மிகப்பெரிய நாடுகளைத் தவிர லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவின் ஒரு சிறிய மூலையைத் தவிர மற்ற அனைத்தும் அடங்கும். உதாரணமாக, புர்கினா பாசோவின் தலைநகருக்கு வெளியே உள்ள மருத்துவ மருத்துவமனை, சுமார் 11,000 மக்களுக்கு சேவை செய்கிறது. ஆனால், ஒரு அழுக்கு- பழைய கட்டிடம், பழைய நுண்ணோக்கி கொண்டுள்ளது. கடந்த இலையுதிர்காலத்தில் அதன் குளிர்சாதன பெட்டி உடைந்து போனதால் தற்போது அம்மருத்துவமனையில் டெட்டனஸ், மஞ்சள் காய்ச்சல், காசநோய் மற்றும் பிற பொதுவான நோய்களுக்கு கூட தடுப்பு மருந்துகளை வழங்க முடியவில்லை” என்று அங்கு பணிபுரியும் செவிலியர் ஜூலியன் ஜூங்ரானா கூறினார். ஊழியர்கள் அதற்கு பதிலாக ஓகடகோவில் உள்ள ஒரு மருத்துவமனையிலிருந்து காப்பிடப்பட்ட கேரியர்களில் குப்பிகளைப் பெறுவதற்கு மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக, புழுதி நிறைந்த சரளை கற்கள் போட்ட சாலையில் சுமார் 40 நிமிட பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

கம்பெலா கிளினிக்கிற்கு அடிக்கடி வருகை தரும் இரண்டு குழந்தைகளுக்கு தாயான 24 வயது அடாமா தப்சோபா கூறும்போது, ஒரு கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டம் உலகின் மற்றவர்களை விட தான் வசிக்கும் பகுதியில் மிகவும் சவாலாக இருக்கும் என்று நினைப்பதாக கூறினார். அவர் தனது குழந்தைக்கு வழக்கமான நோய்த்தடுப்பு மருந்துகளைப் பெறுவதற்காக கடும் வெய்யிலில் சுமார்  நான்கு மணிநேரம் நடந்து வர வேண்டும். மேலும், மருத்துவரைப் பார்க்க பல மணிநேரம் காத்திருக்க வேண்டும். மேலும் கூறும்போது, ஒரு வாரத்திற்கு முன்பு, அவரது 5 மாத மகனின் ஒரு திட்டமிடப்பட்ட தடுப்பு ஊசியை தவறவிட்டார், ஏனெனில் அன்று தப்சோபாவின் மகள் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், அவளால் ஒரு குழந்தையை மட்டுமே தூக்கி கொண்டு நடக்க முடியும் என்பதால், அன்று மகனை ஊசிக்கு அழைத்து வர முடியவில்லை. எனவே, ஒரு (COIVD-19) தடுப்பூசி பெறுவது கடினமாக இருக்கும் என்று தப்சோபா கூறினார். மக்கள் மருத்துவமனையில் காத்திருக்க வேண்டியிருக்கும், அதனால், அவர்கள் மருந்தை பெறாமலேயே வெளியேறக்கூடும். இந்நிலையில் பல சர்வதேச அமைப்புகள், வளரும் நாடுகளில் குளிர்சாதன சேமிப்பாக தொடர்ச்சி தடைபடாமல் இருக்க பல்லாயிரக்கணக்கான சூரிய சக்தியில் இயங்கும் தடுப்பூசி குளிர்சாதன பெட்டிகளை நிறுவுவதை மேற்கொண்டு வருகின்றன.  தடுப்பூசிகளை நோயாளிகளுக்கு வழங்கப்படும் வரை நிலையான வெப்பநிலையில் வைத்திருப்பதற்கு மொபைல் குளிர்பதன வசதி, நம்பகமான மின்சாரம், சாலைகள் வசதிகள் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக முன்கூட்டியே திட்டமிடல் என அனைத்து தேவைகளையும் கவனித்து கண்காணிக்க வேண்டும்.

புர்கினா பாசோ போன்ற ஏழை நாடுகளும், உலக சுகாதார அமைப்பு மற்றும் கோவிட் தடுப்பு மருந்து கூட்டணி தலைமையிலான கோவாக்ஸ் முயற்சி மூலம் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை பெறுவதற்கான சிறந்த வாய்ப்பு உள்ளது. பல நம்பிக்கைக்குரிய தடுப்பு மருந்துகளுக்கு  ஆர்டர்களை வழங்குவதும், சிறந்த மருந்துகளை அனைவருக்கும் சமமாக பிரித்து வழங்குவதுமே,  கோவாக்ஸின் குறிக்கோள். ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நிறுவனமான யுனிசெப், கோபன்ஹேகனில் சில மாதங்களுக்கு முன்பு உலகளாவிய விநியோக அடித்தளத்தை அமைக்கத் தொடங்கியது. உலகின் மிகப்பெரிய மனிதாபிமான உதவிக் கிடங்கில், தளவாட ஊழியர்கள் கடந்த காலத்திலிருந்து கற்றுக்கொள்வதன் மூலம் பற்றாக்குறையை முன்கூட்டியே சரி செய்ய முயற்சிக்கின்றனர். குறிப்பாக முகக்கவசங்கள்  மற்றும் பிற பாதுகாப்பு சாதனங்கள்  ஆகியவற்றின் உலகளாவிய பற்றாக்குறையைச் சுற்றியுள்ள குழப்பம், காரணமாக அவை விமான நிலைய சேமிப்பகத்தில் இருந்து திருடப்படவும், கள்ள சந்தையில் விற்கப்படவும் வாய்ப்புகள் உள்ளன.

தற்போது, 42 கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகள் மருத்துவ பரிசோதனைகளில் உள்ளன.மேலும் 151 மருந்துகள் ஆரம்பகட்ட மதிப்பீட்டில் உள்ளன என்று WHO தெரிவித்துள்ளது. கோவாக்ஸ் மருந்தை எடுத்து கொள்ள விரும்புபவர்கள் அதனை 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் (25-46 எஃப்) வரை உள்ள வெப்ப நிலையில் சேமிக்கப்பட வேண்டும். அல்ட்ராகோல்ட் வெப்பநிலையில் சேமிக்கப்பட வேண்டிய மருந்துகளில் முன்னணி ஃபைசர் மருந்தும் ஒன்று. தனது தடுப்பு மருந்துகளை எடுத்து செல்வதற்காக இந்த நிறுவனமே சிறப்பு சேமிப்பு கூடை ஒன்றை வடிவமைத்துள்ளது. கோவாக்ஸில் இணைந்துள்ள ஃபிஷர் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பானுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. யு.எஸ் மற்றும் ஐரோப்பிய மருத்துவமனைகளில் கூட மைனஸ் 70 டிகிரி செல்சியஸ் சேமிப்பு சாதனங்கள் அரிதாகவே காணப்படுகின்றன. பல வல்லுநர்கள் 2014-16 எபோலா பாதிக்கப்பட்ட மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் சிறந்த சேமிப்பு வசதிகள் இருக்கக்கூடும் என்று நம்புகிறார்கள், ஏனெனில் அந்த வைரஸுக்கு எதிரான தடுப்பூசிக்கும்  அல்ட்ராகோல்ட் சேமிப்பகம் தேவைப்பட்டது.

எவ்வாறாயினும், உலகின் மூன்றில் இரண்டு பங்கிற்கும் மேலான பகுதிகளில், மேம்பட்ட தொழில்நுட்பம் இல்லை என்று ஜெர்மன் தளவாட நிறுவனம் டி.எச்.எல் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், தற்போதுள்ள தடுப்பு மருந்துகள் அல்லது வழக்கமான கொரோனா வைரஸ் மருந்து மற்றும் தடுப்பு மருந்துகளுக்கும் தேவையான குளிர்சாதன பராமரிப்பை வழங்க தேவையான உள்கட்டமைப்பு இல்லாத நாடுகளில் பில்லியன் கணக்கான மக்கள் உள்ளனர் என்று ஆய்வு தெரிவித்துள்ளது. ஒரு தடுப்பூசி பயணிக்கும் தூரம் இந்த தடுப்பூசிகளை இழப்பதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்துகிறது. COVID-19 க்கு எதிராக முழு உலகத்திற்கும் தடுப்பூசி போட 15,000 சரக்கு விமானங்கள் தேவைப்படும் என்று டிஹெச்எல் மதிப்பிட்டுள்ளது. இது விமானங்களுக்கான உலகளாவிய திறனை விரிவுபடுத்துகிறது மற்றும் உலர்ந்த பனி போன்ற பொருட்களின் விநியோக மதிப்பை நீட்டிக்கிறது.