டெஹ்ராடூன்:
வானிலிருந்து பூவை வீசுவதை விட்டு விட்டு தனிமைபடுத்தப்பட்டவர்களுக்கு நல்ல உணவு கொடுங்கள் என்று நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் மருத்துவர்கள், உள்ளிட்ட 15 சுகாதார ஊழியர்களுக்கு, தனிமைப்படுத்தப்பட்டுள்ள இடத்தில் தங்களுக்கு மோசமான உணவு குற்றம்சாட்டியுள்ளனர்.
ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாறிவந்த மூன்று ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களுடன் தொடர்புடைய 15 சுகாதார ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில், தனிமைப்படுத்தப்பட்டுள்ள மருத்துவ ஊழியர்கள் தெரிவிக்கையில், எங்களுக்கு இங்கு தரமான உணவு வழங்கப்படுவதில், இதுபோன்ற மோசமான உணவைக் கொடுப்பது மனிதாபிமானமற்றது செய்லாகும். இதுகுறித்து நாங்கள் அதிகாரிகளிடம் தெரிவித்த போது, உடனே சரி செய்வதாக தெரிவித்தனர் என்று கூறியுள்ளனர்.
இது குறித்து மேலும் பேசிய அவர்கள், எங்களுக்கு பாலிதீன் பேக் களிலேயே உண்வு கொடுக்கப்படுகிறது. சாப்பிட தட்டு எதுவும் கொடுப்பதில்லை. அடிப்படை வச்திகளும் முறையாக இல்லாமல் எப்படி சுகாதாரத்தை உறுதி செய்து கொள்வது என்றே தெரியவில்லை என்று வருத்ததுடன் கூறினர். மேலும், வானிலிருந்து பூவை வீசுவதை விட்டு விட்டு, எங்களை போன்ற நோயாளிகளுக்கு நல்ல உணவு அளிக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டனர்.
இங்கு ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே இருக்கிறது. திறந்த நிலையில் குப்பை கொட்டு தொட்டி ஒன்றும் இருக்கிறது. மேலும் ஒரு படுக்கை, தலையணை மற்றும் இரண்டு பெட்ஷீட்கள் மட்டுமே வழங்கப்பட்டதாகவும் கூறினார்.
நாங்கள் இங்கு வந்து 48 மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது, இன்னும் அறையை சுத்தம் செய்யவில்லை, நாங்கள் சுத்த செய்ய நினைத்தாலும், அறையில் விளக்குமாறு இல்லை. குப்பை தொட்டியை காலி செய்ய இடமும் இல்லை. டாய்லெட் கிளினரும் இங்கு இல்லை. நாங்கள் ஒரே படுக்கையில் உட்காருவதுடன், அதிலேயே சாப்பிட்டு விட்டு தூங்கி வருகிறோம் . இப்படி இருக்கும் போது, அடிப்படை சுகாதாரத்தை எப்படி கடைபிடிக்க முடியும். அடிப்படை சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் அதிகாரிகள், இதுபோன்று நடந்து கொள்வது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து பேசிய மறறொரு ஊழியர், “நாங்கள் எய்ம்ஸ் போன்ற ஒரு முதன்மையான நிறுவனத்தில் படித்து வேலை செய்து வருகிறோம். இதற்கு எங்களுக்கு கிடைத்த வெகுமதி இதுதான் என்று கூறினார்
தனிமைப்படுத்தப்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் எழுப்பிய பிரச்சினைகள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த இயக்குனர் எய்ம்ஸின் பணியாளர் அதிகாரி டாக்டர் மதுர் யூனியல், “பிரச்சினைகள் இருந்தது உண்மை தான். இப்போது சரி செய்யப்பட்டு விட்டது என்றார்.