ஐடிஐ படித்தோருக்கு பதிலாக அனைத்து பணிகளும் தனியாருக்கே வழங்க மின் வாரியம் உத்தரவு

Must read

சென்னை

மிழக மின் வாரியத்தில் ஐடிஐ படித்தோருக்கு இனி பணி கிடையாது எனவும் மாறாக தனியாருக்குப் பணி வழங்கப்படும் எனவும் மின் வாரியம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஐடிஐ முடித்துவிட்டு பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் பணி இன்றி தவித்து வருகின்றனர்.  இவர்களுக்குத் தமிழக மின்வாரியம் அதிக அளவில் பணிகளை அளித்து வந்தது.   பல இளைஞர்கள் மின் வாரியத்தில் பணி கிடைக்கும் என எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் வேளையில் தமிழக மின் வாரியம் இவர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

தமிழக மின் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஐடிஐ மாணவர்களுக்கு புதிய பணிகள் வழங்குவதற்குப் பதிலாகத் தனியார் மூலம் ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை நியமித்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  இந்த அறிவிப்பு இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளதால் ஐடிஐ படித்தோருக்கு உடனடியாக வேலை வாய்ப்பு கிடைக்காது என்பது தெளிவாகி உள்ளது.

இந்த பணிகளுக்காகத் தனியாருக்கு ரூ.1.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.   இவ்வாறு தனியார் மூலம் நியமிக்கப்படும் ஊழியர்களுக்கு மாத ஊதியம் ரூ.12,360 வழங்கப்பட உள்ளது.   அத்துடன் ஒவ்வொரு ஆண்டும் 5% ஊதிய உயர்வு அளிக்கப்பட உள்ளது. 

More articles

Latest article