அரைகுறை ஆடையுடன் விமானத்தில் ஏறிய மாடல் அழகிக்கு பறக்க அனுமதி மறுப்பு

Must read

 

ஆஸ்திரேலிய மாடல் அழகி இஸபெல்லே எலீனோரே, இன்ஸ்டாகிராமில் இவரது விளம்பரங்களை ரசிப்பதற்கு என்றே தனிகூட்டம் இருக்கிறது.

இருந்தபோதும், ஒரு விமானப் பணிப்பெண் கடந்த பிப்ரவரி மாதம் இவரை விமானத்தில் ஏற அனுமதி மறுத்த சம்பவம் சமீபத்தில் இவரது சமூக வலைதளபக்கங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இஸபெல்லே எலீனோரே

ஜெட்ஸ்டார் விமானத்தில் பயணம் செய்தபோது அரைகுறை ஆடையுடன் ஏறியதாக கூறி என்னை மேலும் கீழும் பார்த்ததுடன் உடலை மறைக்க ‘ஜேக்கட்’ போல் எதுவும் வைத்திருக்கிறீர்களா என்று கேட்டு என்னை சங்கடப்படுத்தினார்கள்.

என்னிடம் அதுபோன்ற ஆடை எதுவும் இல்லாததால், அதை எடுத்து வரும் வரை என்னை நிற்க வைத்துவிட்டார்கள், முகக்கவசத்துடன் நின்றிருந்த என்னை போவோர் வருவோர் எல்லாம் ஒருமாதிரியாக பார்த்தது என்னை உசுப்பேற்றியது.

தனது கணவருடன் விமானத்தில் இஸபெல்லே எலீனோரே

அன்று நான் எனக்கு பொருத்தமானதாக இல்லாத சற்று சிறிய கிராப் டாப்பை அணிந்தது அவர்கள் கண்ணுக்கு உறுத்தலாக இருந்ததால் இந்த விவகாரம் வேண்டுமென்றே பெரிதாக்கப்பட்டது, ‘ஜேக்கட்’ எடுத்துவந்த பின்தான் என்னை இருக்கையில் அமர அனுமதித்தனர்.

இதுகுறித்து ஜெட் ஸ்டார் நிர்வாகத்திற்கு புகாரளித்த பின் இது எங்கள் நிறுவனத்தின் விமானத்தில் பயணிப்பவர்களுக்கான பொதுவான விதி என்ற போதும் இந்த சம்பவத்திற்காக என்னிடம் வருத்தம் தெரிவித்தனர் என்று இஸபெல்லே எலீனோரே பதிவிட்டுள்ளார்.

More articles

Latest article