லண்டன் – வாஷிங்டனில் நடந்த பெண்கள் மார்ச்சி பேரணியினால் ஈர்க்கப்பட்டு, உலகம் முழுவதும் பல நகரங்களில் உள்ள மக்கள் சனிக்கிழமை அன்று அமெரிக்கர்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் விதமாகவும் மனித உரிமைகள் மற்றும் பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பதற்காகவும் தங்கள் நாடுகளில் பேரணி நடத்தினர்.
வாஷிங்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தான் இதுவரை நடந்த ஆர்ப்பட்டங்களிலேயெ பெரியதாகும். அது பெரும் எண்ணிக்கையில் மக்களை ஈர்த்த போதிலும், மாஸ்கோ முதல் மான்செஸ்டர் வரை உலகம் முழுவதும் 673 நகரங்களில் நடந்த பேரணிகளில் அதுவும் ஒன்றாகும். பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டியது என்ற அழுத்தமான செய்தியை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி டிரம்ப் அவர்களின் முதல் அலுவலக நாளில் அனுப்ப வேண்டும் என்பதே இந்த போராட்ட்த்தின் குறிக்கோள் என்று அமைப்பாளர்கள் கூறினர்.
டிரம்ப் அவர்களின் பிரச்சாரத்தில், ஆபாச கருத்துக்கள், பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டுகள் மற்றும் பெண்கள் குறித்து தரக்குறைவான கருத்துக்கள் மலிந்து காண்ப்பட்டது, இருந்தும் டிரம்ப் அதனை ” ஓய்வறைப் பேச்சு” என்று கூறி உதாசீனப்படுத்தினார். பெரும்பாலான வெள்ளைக்கார பெண்கள் உட்பட பல பெண்கள் டிரம்ப்பிற்கு வாக்களித்தனர்.
சில அமைப்பாளர்கள் “டிரம்ப்பிற்கு எதிராக” பேரணிகளை மாற்ற முயற்சித்து அதற்குப் பதிலாக ஒற்றுமைபற்றிய செய்திகளை வலியுறுத்தினர்.
“ஒன்றாக வந்து, வருந்தி, பின்னர் அந்த ஒற்றுமையைக் கொண்டாடுவதற்கான ஒரு வாய்ப்பு இது,” என்று நண்பகலில் (GMT) தொடங்கிய லண்டன் பேரணியை ஏற்பாடு செய்த கிம்பர்லி எஸ்பினல், கூறினார்.
லண்டனில் கூட்டம் ஏராளமாகவும், உற்சாகமாகவும் காணப்பட்டது- கிட்டத்தட்ட 1,00,000 பங்கேற்பாளர்கள் இருந்ததாக அமைப்பாளர்கள் மதிப்பிட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள், “ஒவ்வொரு புரட்சியிலும் பெண்களின் பங்களிப்பு உள்ளது,” போன்ற வண்ணமயமான கோஷ அட்டைகளைப் பிடித்துக் கொண்டிருந்தனர். டிரம்ப் மற்றும் “ஹாரி பாட்டர்” புத்தகங்களை வெளிப்படையாகச் சுட்டிக் காட்டு, “வால்டுமார்ட் கூட மேலானவர்”, என்பது போன்ற கோஷ அட்டைகளையும் வைத்திருந்தனர்.
எதிர்ப்பாளர்கள் முதலில் அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே கூடினர், பின்னர் மத்திய லண்டன் வழியாக டிராபல்கர் சதுக்கத்திற்கு சென்றனர். லண்டன் மேயர் சாதிக் கானும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு வெளியிட்ட அறிக்கையில் “ஒரு பெண்ணியவாதியாகிய நான் பாலின சமத்துவத்திற்கான போராட்டத்தை முழுமையாக ஆதரிக்கிறோம்,” என்று தெரிவித்துள்ளார்.
மெரினா நைட் (43 வயது) என்ற நிர்வாக உதவியாளர், அவரது 9-வயது மகள், ஃபியுடன், சனிக்கிழமை அன்று அணிவகுப்பில் கலந்து கொண்டார்.
“இதுதான் என்மகளின் முதல் அணிவகுப்பு. அணிவகுத்துச் செல்வதின் இன்றியமையாமையை முதல் முறை இப்போது தான் உணர்ந்தோம். நமது பிள்ளைகளுக்கும் அடுத்த தலைமுறைக்கும்அவர்களது உரிமைகளை வழங்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம்” என்றார்.
அண்டார்க்டிக், உட்பட கண்டங்கள் முழுவதும் பரவியிருக்கும் 70 க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்தப் பேரணி நடைபெற்று வருகிறது.
கனடாவில், வடமேற்கு நிலப்பகுதிகளில் உள்ள யெல்லொனைஃப் உட்பட 34 நகரங்களில் நிகழ்வுகள் திட்டமிடப்பட்டு, மக்கள் -6 டிகிரி வெப்பநிலையில் அணிவகுத்துச் சென்றனர். அங்கு வாழும் அந்தோணி டோயில் “மிகவும் குளிராகத் தான் இருந்தது,” என்று கூறினார். ஆனால் அவர் பேரணியில் கலந்து கொள்ள சென்றார். ஏனெனில் ஒரு தந்தையாக, “எனது மகனுக்கு இவ்வுலகில் நல்ல முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்”, மேலும் டிரம்ப் போன்ற ஒரு மனிதன் பெண்களைப் பற்றி அவர் நினைப்பதையெல்லாம் கூறிய பிறகு, “வளர்ந்து வரும் பிள்ளைகளிடம் அது ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தைப் பற்றி நான் கவலைப்படுகின்றேன்.”
இஸ்ரேலில், டெல் அவிவ்வில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு முன் பல நூறு மக்கள் கூடினர். அமெரிக்க இஸ்ரேலியர்கள் தலைமையில் பேரணி நடந்தது. இனவெறி மற்றும் பாலின வேறுபாட்டிற்கு டிரம்ப் காரணமெனக் கூறியப் பேச்சாளர்கள், ஆங்கிலத்தில் பேசினார்.
“அமெரிக்காவைப் பெருமைப்படுத்துவது அன்பு தான்! வெறுப்பு அல்ல!” என்று கோஷமிட்டபடியும், “கேவலமான பெண்கள் ஒன்றிணைந்தனர்” மற்றும் “கருப்பர்களின் உயிர் முக்கியம்” என்பன போன்ற கோஷங்கள் அடங்கிய அட்டைகளை அசைத்தும் பங்கேற்பாளர்கள் அணிவகுத்துச் சென்றனர்,
பாரிஸில், பிரஞ்சு மற்றும் அமெரிக்க பெண்ணுரிமை அமைப்புகளால் ஒருங்கிணைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் ஆண்கள் புதிய அமெரிக்க ஜனாதிபதியை நிராகரித்து நகரின் சாலைகளில் அணிவகுத்துச் சென்றனர்.
ஆனால், பேரணி அமைப்பாளர்களில் ஒருவரான மேரி அலிபெர்ட்டிற்கு, அந்தப் பேரணியின் நோக்கம் முற்றிலும் டிரம்ப்பின் வார்த்தைகளையும் நடவடிக்கைகளையும் கண்டித்து அல்ல. “முக்கியமாக இது பெண்கள் உரிமைகள், மனித உரிமைகள் பற்றியது,” என்று அவர் கூறினார். “ஆர்ப்பாட்டத்தின் போது ஆணாதிக்கத்தனமான, இனவெறியோடும் வெறுப்பான செய்திகளும் தான் நிறைய இருந்தன, ஆனால் நாம் அதற்கு எதிராகத் தான் நிற்கிறோம்” என்றார்.
அமெரிக்க ஜனாதிபதி பதவி ஏற்பதற்குத் தொடர்பாக பல வெளிநாட்டவர்கள் ஆர்ப்பாட்டங்களில் அணிவகுக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கத் தேர்தல் முடிந்த மறுநாள், வாஷிங்டன் அணிவகுத்துச் செல்ல ஒரு திட்டம் தீட்டப்பட்து. சில மணி நேரங்களிலேயே, மற்ற நாடுகளிலிருந்து வாஷிங்டனிற்கு வரமுடியாத, ஆனால் பங்கேற்க விரும்பிய மக்கள் அமைப்பாளர்களைத் தொடர்புகொண்டு, “முதல் 24 மணி நேரத்தில், லண்டன், நோர்வே, ஆஸ்திரேலியா, கனடா, சுவிச்சர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து மக்கள் “நாங்களும் எங்கள் நாட்டில் அணிவகுப்பு நடத்த விரும்புகிறோம், எங்களுக்கான பேஸ்புக் பக்கத்தை உருவாக்கித் தர முடியுமா? ‘ ” என்று பிரனி பட்லர், நியூயார்க்கின் ஒரு சமையல்காரரும் நிகழ்வின் உலக அமைப்பாளருமான ப்ரீயன் பட்லர் கூறினார்.
இந்தப் போராட்டத்தில், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து பெண்கள் அதிகளவில் கலந்துக்கொண்டனர்.