மதுரை:

த்தூர் காவல்நிலையத்தில் ஆய்வாளர் தாக்கியதில் உதவி ஆய்வாளர் மூக்கு உடைந்தது .

மத்தூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பார்த்திபன். இவர் அடிக்கடி காலதாமதமாக பணிக்கு வருந்த்தாகவும்,  இதை ஆய்வாளர் இராமாண்டவர் கண்டித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்றும் அவர் காலமாதமாக வந்த்தை அடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஆத்திரமான ஆய்வாளர் இராமாண்டவர்,  சிறப்பு உதவி ஆய்வாளர் பார்த்திபனை தாக்கியதாகவும், இதில் பார்த்திபன் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டவே,  உடனடியாக அவர் மத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

காவல் நிலையத்தில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

[youtube-feed feed=1]