மும்பை,

மது நாட்டிலேயே  தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் கல்வாரி நீர்மூழ்கி கப்பலை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

மோடி தலைமையிலான அரசு, மேக் இன் இந்தியா திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தியது. அந்த திட்டத்தின் கீழ், மும்பையை தலைமையகமாகக் கொண்ட, மசாகான் டாக் லிமிடெட்  என்ற கப்பல் கட்டும் நிறுவனம் இந்தியாவுக்கு தேவையான நீர் மூழ்கி கப்பலை தயாரிக்க ஒப்பந்தம் செய்தது. 6 நீர் மூழ்கி கப்பல் தயாரிக்கும் பணி அந்த நிறுவனத்துக்கு தரப்பட்டது.

இந்நிலையில், அந்த நிறுவனம் தனது முதல் கப்பலை தயாரித்து இந்திய கடற்படைக்கு கொடுத்துள்ளது. இந்த கப்பல் முழுவதும் நமது உள்நாட்டு தொழில்நுட்பத்திலேயே தயாரிக்கப்பட்டது.

இந்த கப்பலை மாசாகான் நிறுவனம் இந்திய கடற்படையிடம் ஒப்படைத்தது. இந்த  நீர்மூழ்கிக் கப்பலை மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்த பெருமைமிகு  நிகழ்ச்சியில் பாதுகாப்புதுறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர்ராவ், முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் கடற்படை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி ஐ.என்.எஸ்.கல்வாரி நீர் மூழ்கிக் கப்பலுக்குள் சென்று பார்வையிட்டார்.