சென்னை: தமிழகத்தில் பிரபலமான இரண்டு  ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலைளுக்கு சிறப்பு சலுகைகள் அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஐநாக்ஸ் ஏர் புராடக்ட்ஸ் மற்றும் சிவிஐ டிரேட் ஆகிய 2 நிறுவனங்களுக்கும் சலுகைகள் வழங்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தொடர்ந்து, ஆக்சிஜன் உள்பட மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தொடங்கும் நிறுவனங்களுக்கு  30சதவிகித மானியம் வழங்கப்படும் என தமிழகஅரசுஅறிவித்தது. இவை குறைந்தபட்சம் தலா 50 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் 30 சதவீதம் மூலதன மானியமாக வழங்கப்படும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து பல நிறுவனங்கள் ஆக்சிஜன் உள்பட மருந்து தயாரிக்க முன்வந்துள்ளன.

இந்த நிலையில், ஐநாக்ஸ் ஏர் புராடக்ட்ஸ் மற்றும் சிவிஐ டிரேட் ஆகிய 2நிறுவனங்கள் மேலும் உற்பத்தி ஆலைகளை தொடங்க முன்வந்துள்ளது. இதன் காரணமாக அந்நிறுவனங்களுக்கு  முத்திரை வரியில் 50% சலுகை வழங்குவதோடு, மின்சாரத்திற்கு 5 ஆண்டுகள் வரிவிலக்கு அளித்தும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி,  ஜூன் 12 (ஐஏஎன்எஸ்) சிறப்பு மருத்துவ சலுகைகளுக்கு தகுதியுடையவர்களாக திரவ மருத்துவ ஆக்ஸிஜன் ஆலைகளை அமைப்பதற்கான முதலீட்டு காலத்தை 31.12.2022 வரை தமிழக அரசு நீட்டித்துள்ளது.

ஐனாக்ஸ் ஏர் தயாரிப்புகள் மற்றும் சி.வி.ஐ வர்த்தகம் ஆகியவற்றின் கோரிக்கையின் பேரில் மாநில அரசு ஊக்கத் திட்டத்தை மாற்றியமைத்தது. திருத்தப்பட்ட திட்டத்தின் படி, குறைந்தபட்சம் 50 கோடி ரூபாய்க்கு ஒரு நாளைக்கு 10 டன் கொண்ட திரவ மருத்துவ ஆக்ஸிஜன் ஆலைகளை அமைக்கும் நிறுவனங்களுக்கு ஐந்து ஆண்டுகளில் சம தவணைகளில் 30 சதவீத மூலதன மானியம் வழங்கப்படும்.

‘இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.