மத்திய அரசு சமீபத்தில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்ததையடுத்து வங்கிகளில் பணத்தை மாற்ற மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. ஏடிஎம் மற்றும் வங்கி வரிசைகளின் நின்று முதியவர்கள் பலர் மரணமடையும் செய்திகளும் தினமும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
எனவே வங்கிகளில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த, ஏற்கனவே வந்து பணம் எடுத்தவர்களே தினமும் திரும்ப திரும்ப வந்து பணம் எடுப்பத தடுக்கும் வகையில் அவர்கள் வலது கை விரலில் மை அடையாளம் வைக்கப்படும் என்று தெரிகிறது. வழக்கமாக இந்த மை தேர்தலில் ஓட்டுப்போட்டவர்களுக்கு இடது கை மோதிர விரலில் வைக்கப்படும். விரைவில் சில மாநிலங்களில் இடைத்தேர்தல்ள் நடைபெற உள்ள நிலையில் இடது கை விரலில் மை வைப்பது தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும் என்பதால் வலது கையில் மை வைக்கப்படும் என்று தெரிகிறது.