
சென்னை:
2ஜி வழக்கில் இருந்து திமுகவை சேர்ந்த ராஜா, கனிமொழியை சிபிஐ கோர்ட்டு விடுவித்து உள்ளது. இதன் காரணமாக திமுகவினர் உற்சாகமடைந்து உள்ளனர்.
இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், வழக்கின் தீர்ப்பு குறித்து திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்து உள்ளார்.
அதில், அநீதி வீழும்; அறம் வெல்லும் என்று கருணாநிதி எழுத்தாக எழுதி கருத்து தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel