இந்திய வர்த்தக பள்ளியில் உரையாற்றிய நாராயணமூர்த்தி, இந்திய ஐ.டி. கம்பெனிகள் தரகர் போல் செயல்பட்டுவருவதை நிறுத்த வேண்டும்.
ஐ.டி. கம்பெனிகள் தம்முடைய இந்தியப் பணியாளர்களுக்கு விசா, கிரீன் கார்ட் வாங்கித்தரும் ஏஜன்ட்டாக செயல்பட்டுவருவது ஆபத்தானது. இந்திய கம்பெனிகள் 20-25% சத வேலைகளை வாடிக்கையாளர் நாட்டிலும், மீதமுள்ள 7-0-75 சத வேலைகளை இந்தியாவிலும் மேற்கொண்டு வருகின்றன. இந்திய நிறுவனங்கள் அமெரிக்கர்களுக்கும் வேலைவாய்ப்பினை உருவாக்கிட வேண்டும் என கருத்து தெரிவித்தார்.
அமெரிக்காவில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள டொனால்ட் டிரம்ப் , இந்தியர்களை விரட்டுவேன், அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்குவேன் என வாக்கு சேகரித்து வருவது குறித்த கேள்விக்கு, இவ்வாறு அவர் கூறினார்.
ஐ.டி. கம்பெனிகளின் கூட்டமைப்பான நாஸ்கம்(NASSCOM) புள்ளிவிவரப்படி, உலகின் 55 சத அவுட்சோர்சிங் வேலைகள் இந்தியாவில் இருந்து நடைபெறுகின்றது. 3.5 மில்லியன் ஐ.டி.தொழிலாளர்கள் இப்பணியில் உள்ளனர்.