சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து முடித்துள்ள படம் சூரரைப் போற்று. இதில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும், மோகன் பாபு, ஜாக்கி ஷெராப், கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் அக்டோபர் 30ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லரை அக்டோபர் 15-ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக இசையமைப்பாளர் ஜீ.வி பிரகாஷ் ட்வீட் செய்துள்ளார்.