புதுடெல்லி:
இந்தியாவில் தொழில் வளர்ச்சி கடந்த ஆண்டை விட பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட தொழிற்துறை உற்பத்தி தரவுகளின் விவரம் வருமாறு:
ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை வரும் ஏப்ரல் 4-ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இதன்படி, பொருளதார நடவடிக்கையை அதிகரிக்கும் வகையில் வட்டி விகித குறைப்பு இருக்கும்.
உற்பத்தித் துறையின் வளர்ச்சி 2018-ம் ஆண்டு ஜனவரியில் 8.7% இருந்தது. தற்போது ஜனவரி 2019-ல் 1.3 சதவீதமாக குறைந்துள்ளது.
அதேபோல், எரிசக்தி துறையிலும் கடந்த ஆண்டைக் காட்டிலும் 0.8% குறைந்துள்ளது. எனினும் கனிமவளத் துறையில் கடந்த ஆண்டில் 0.3% வளர்ச்சி மட்டுமே இருந்தது. இந்த ஆண்டில் 3.9% அதிகரித்துள்ளது.