செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தை தாணு தயாரிக்க, தனுஷ் நடிக்கிறார். இதில் நாயகியாக இந்துஜா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி போன்ற மாஸ்டர் பீஸ்களில் செல்வராகவனுடன் இணைந்து நின்ற யுவன் நானே வருவேனில் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளராக யாமினி யாக்னமூர்த்தி பணிபுரிந்து வருகிறார்.
தனுஷ் – செல்வராகவன் கூட்டணிக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இவர்கள் கூட்டணியில் வெளியான காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
‘நானே வருவேன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நகைச்சுவை நடிகர் யோகிபாபு ஒப்பந்தமாகி உள்ளார். ஏற்கனவே தனுஷுடன் கர்ணன் படத்தில் இணைந்து பணியாற்றியுள்ள யோகிபாபு, செல்வராகவன் இயக்கத்தில் நடிப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நானே வருவேன் படத்தில் இந்துஜா முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். நானே வருவேன் பூஜையில் இவரைத் தவிர வேறு பிரபல நடிகைகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. அதனால், இவரே படத்தின் நாயகி என்கிறார்கள். இது இந்துஜாவுக்கு கிடைத்திருக்கும் பெரிய வாய்ப்பு.