ஜகர்தா:
இந்தோனேசியாவின் தலைநகராக ஜகர்தா இருந்து வரும் நிலையில், அதை வேறு நகருக்கு மாற்ற இந்தோனேசியா அதிபர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தலைநகரை ஜகர்தாவில் இருந்து ஜாவா தீவில் உள்ள வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய அந்நாட்டின் அதிபர் அதிபர் ஜோக்கோ விடோடோ தீர்மானித்து உள்ளார். இதற்கான தீர்மானன்ம நிறைவேற்றப்பட்டு உள்ளது.
இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவில் சுமார் 10 மில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர். ஜகர்தாவில் மட்டும் சுமார் ஒரு கோடி மக்கள் வசித்து வரும் நிலையில், அருகாமையில் உள்ள நகர்ப்புறங்களில் சுமார் 3 கோடி மக்கள் வசிப்பதாக கூறப்படுகிறது.
தற்போது நகரங்களில் பெருகி வரும் மக்கள் நெருக்கடியை கட்டுப்படுத்தவும் புதிய நகரங்களை உருவாக்கி மக்களை அங்கு குடியமர்த்தவும் இந்தோனேசியா அரசு தீர்மானித்துள்ளது. இதன் முதல்கட்டமாக இந்தோனேசியா நாட்டின் தலைநகரை ஜகர்தாவில் இருந்து ஜாவா தீவில் உள்ள வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய அந்நாட்டின் அதிபர் ஜோக்கோ விடோடோ தீர்மானித்துள்ளார்.