நாட்டின் பொது போக்குவரத்து சேவைக்காக சீனாவிடமிருந்து வாங்கிய வாகனங்கள் தரமற்றவையாக இருப்பதால் இனி சீனாவிடமிருந்து பொது போக்குவரத்துக்கான வாகனங்களை வாங்குவதில்லை என்று சிங்கப்பூரும், இந்தோனேஷியாவும் முடிவு செய்துள்ளன.

smrt

இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் ஓடுவதற்கென 509 புதிய பேருந்துகளை வாங்க முடிவு செய்த அந்நாட்டு அரசு உள்ளூர் தயாரிப்புகளையே தேர்வு செய்துள்ளது. இனிமேல் சீனத்தயாரிப்பு பேருந்துகளை வாங்குவதில்லை, உள்ளூர் தயாரிப்புக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்று ஜகார்த்தாவின் கவர்னர் பசுக்கி அஹோக் அறிவித்துள்ளார்.
அதேபோல சிங்கப்பூர் அரசின் எஸ்.எம்.ஆர்.டி நிறுவனம் கடந்த 2011-இல் சீனாவிடமிருந்து ரயில்களை விலைக்கு வாங்கியிருந்தது. ஆனால் அவற்றில் தரம் மிகவும் மோசமாக இருந்தபடியினாலும், அடிக்கடி அவை பழுதடைந்தபடியினாலும் அந்த ரயில்கள் அத்தனையையும் சரி செய்து தரும்படி சீனாவுக்கே திருப்பி அனுப்பிவிட்டது சிங்கப்பூர் அரசு. மிக கீழ்தரமான வேலைப்பாட்டினால் ரயில்களின் கண்ணாடிகள் அடிக்கடி உடைந்து சிதறுவதாகவும், பழுதுபார்க்கப்படும் பேட்டரிகள் வெடிப்பதாகவும் அந்நாட்டு அரசு குற்றம் சாட்டியுள்ளது. இப்பொழுது சீன பேட்டரிகளுக்கு பதிலாக ஜெர்மன் தயாரிப்புகளான பேட்டரிகள் அங்கு பயன்படுத்தப்படுகின்றன.