இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால், கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் வடகிழக்கில் உள்ள சுலவேசி தீவில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவு ஆனதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலநடுக்கமானது சுலவேசி தீவுக் கடல் பகுதியில் டென்ரேட் சிட்டிக்கு 113 கி.மீ தொலைவிலும் வடக்கு மலுக்கு பகுதியிலும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்தோனேசிய புவி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் காரணமாக வீடுகளில் இருந்த மக்கள் வீதிக்கு வந்து தஞ்சமடைந்தனர். இரவு முழுவதும் வீதிகளிலேயே படுத்து தூங்கினர்.