இந்தோனேசியாவில் கனமழை, நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 126 ஆக உயர்வு….!

Must read

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் கனமழை, நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது.

லெம்பாடா தீவில் சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலச்சரிவில் மட்டும் 12க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டன. இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளது.

நிலச்சரிவில் சிக்கி பலரும் காணாமல் போனதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதால், பெரும்பாலான மக்கள் இடம்பெயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளதால் மீட்பு முயற்சிகள் தொடர்ந்து தடைப்பட்டு வருகின்றன. நிவாரணப் பொருள்கள் மற்றும் மீட்புப் படையினருடன் மேலும் 3 ஹெலிகாப்டர்கள் வந்துள்ளதாக பேரிடர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

More articles

Latest article