வாஷிங்டன்: அமெரிக்காவின் தேசிய புகைப்பட கண்காட்சியில் இந்தியா வம்சாவளி இந்திரா நூயி போட்டோ வைக்கப்பட்டுள்ளது, பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.


சென்னையில் பிறந்த இந்திரா நூயி, பள்ளி, கல்லூரி படிப்பை இங்கேயே நிறைவு செய்தார். பின்னர், உலகப்புகழ்பெற்ற குளிர்பான நிறுவனத்தில் தலைவராக பதவியேற்றார்.
கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக அந்த பதவியில் இருந்த அவர், அதன் பின்னர் விலகினார். உலகளவில் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் இடம்பிடித்த அனைவரையும் கவர்ந்தவர்.


அமெரிக்காவில் உள்ள தேசிய புகைப்பட கண்காட்சியில் அவரது போட்டோ வரையப்பட்டு, பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. உலகளவில் பெரும் புகழ் பெற்றது இந்த புகைப்பட கண்காட்சி. அவரது சாதனைகள், கலாச்சாரம் ஆகியவற்றில் அளித்த பங்களிப்பு காரணமாக அவரது போட்டோ அங்கு வைக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பான விழாவில் கலந்து கொண்ட இந்திரா நூயி கூறியதாவது: தெற்காசியாவைச் சேர்ந்த புலம்பெயர்ந்த ஒருவரான எனது புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது.
உங்கள் பின்னணி என்ன, நிறம், மரபு என்ன என்பது இங்கே முக்கியமல்ல. நாட்டின் முன்னேற்றத்துக்கான ஆரோக்கியமான சிந்தனை என செயல்பட்டால் பாராட்டப்படுவீர்கள்.


இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. இப்படி நடக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை என்றார். தன்னை அப்படியே அச்சு அசலாக வரைந்திருந்த ஜான் பிரைய்டுமென் வரைந்திருக்கிறார்.
மிக சிறப்பாக வரைந்திருக்கிறார். எனது உள்மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிந்து அதை அப்படியே புகைப்படமாக வரைந்திருக்கிறார். அதற்கான நூற்றுக்கணக்கான புகைப்படங்களை அலசி ஆராய்ந்தார்.


போட்டோவின் ஒவ்வொரு பகுதியையும் ஆச்சரியமாக பார்க்கிறேன். இந்த விஷயமாக என்னை கடிதம் மூலம் அணுகிய போது நான் நம்பவில்லை. அது நகைச்சுவை என்றே எண்ணினேன். ஆனால் தற்போது அது உண்மையாகி இருக்கிறது என்றார்.
இந்திரா நூயி உருவப்படம் மட்டுமல்ல, பிரான்சிஸ் அர்னால்டு, லின் மேனுவல் மிராண்டா உள்ளிட்ட பலரின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.