டெல்லி

ண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதால் பயணிகள் அவசர கால கதவு வழியாக இறக்கப்பட்டனர்.

தலைநகர் டெல்லியிலிருந்து நாள்தோறும் வெளி மாநிலத்திற்கும், வெளி நாட்டிற்கும் அதிகளவில் பொதுமக்கள் பயணித்து வருகின்றனர். இன்று அதிகாலை 5.30 மணி அளவில் டெல்லியில் இருந்து வாரணாசிக்கு இண்டிகோ விமானம் புறப்படத் தயாராக இருந்தது.  விமானத்தில் பயணிக அமர்ந்த நிலையில் வாரணாசிக்கு புறப்படத் தயாராக இருந்தது.

அப்போது இண்டிகோ விமானத்தில்  வெடிகுண்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் கிடைத்தது  விமானத்தின் கழிவறையில் வைக்கப்பட்டிருந்த tissue paper-ல் BOMB என்ற வார்த்தை எழுதப்பட்டு இருந்த நிலையில், இதனை பார்த்த விமான பணியாளர்கள் உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

எனவே விமானத்தில் இருந்த பயணிகளை அவரசகால கதவு வழியாக விமான நிலைய அதிகாரிகள் பாதுகாப்பாக இறக்கிவிட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள், வெடிகுண்டு அகற்றும் குழுவினர், தீயணைப்பு துறையினர் என பாதுகாப்பு குழுவினர் விமானத்தை சோதனை செய்தனர்.

டெல்லி விமான நிலைய அதிகாரிகள் இந்த இண்டிகோ விமானத்தை விமான நிலையத்தின் ஒரு பகுதியில் தனிமைபடுத்தப்பட்டு சோதனை நடைபெற்று வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.  சோதனையில் விமானத்தில் எந்த ஒரு வெடி பொருளும் இல்லை என்பது கண்டறியப்பட்டது.

மேலும் அந்த tissue paper தகவல் என்பது ஒரு ஏமாற்று வேலை என சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக டெல்லி விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.