சென்னை

சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இந்தியாவின் 2ஆம் பிளாஸ்மா வங்கி தொடங்க உள்ளது.

ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கபட்டு குணமடைந்தோரின் ரத்தத்தில் இருந்து பிளஸ்மா எடுத்து அதை பாதிக்கப்பட்டோர் உடலில் செலுத்தி சிகிச்சை அளிப்பதற்கு பிளாஸ்மா சிகிச்சை எனப் பெயராகும்.  இந்த சிகிச்சை பலருக்கு நல்ல பலனை அளித்துள்ளது.  இந்த சிகிச்சை முறை இன்னும் ஒப்புதல் பெறாததால் சோதனை முறையில் உள்ளது.

டில்லியில் இதற்காக பிளாஸ்ம வங்கி தொடங்கப்பட்டுள்ளது.  இங்கு நோய்த் தொற்றில் இருந்து குணம் அடைந்தோரின் ரத்தத்தில் இருந்து பிளாஸ்மா எடுக்கப்பட்டு சிகிச்சைக்காகச் சேமிக்கப்படுகிறது.   இது இந்தியாவின் முதல் பிளாஸ்மா வங்கி ஆகும்,  இந்நிலையில் சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் பிளாஸ்மா வங்கி அமைக்கப்பட்டுள்ளது.

நாளை இதைத் தமிழக சுகாதார அமைச்சர் விஜய பாஸ்கர் திறந்து வைக்க உள்ளார்.  இந்த வங்கிக்காக ரூ.2.5 கோடி செலவில் நவீன கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.  இங்கு ஒரே நேர்த்தில்  7 பேர் வரை பிளாஸ்மா கொடை அளிக்க முடியும்.  18 வயதில் இருந்து 65 வயதானவர்கள் கொரோனாவில் இருந்து நலமடைந்து 14 நாட்களுக்குப் பிறகு பிளாஸ்மா கொடை அளிக்கலாம்.