டில்லி
இந்தியா எந்தெந்த நாடுகளில் எவ்வளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளன என்னும் விவரத்தை மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் பெட்ரோலியத் தேவைகளுக்காக பல நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. பாராளுமன்றத்தில் இது குறித்து வினா ஒன்று எழுப்பட்டது. அதற்கு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுத்து வடிவத்தில் பதில் அளித்துள்ளார்.
அந்த பதிலில் காணப்படுவதாவது :
”கடந்த 2017-18ஆம் வருடத்தில் ஏப்ரல் முதல் ஜனவரி இந்தியாவுக்கு சவுதி அரேபியா அதிக அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்துள்ளது. சவுதி அரேபியா ஏற்றுமதி செய்த மொத்த அளவான 30.9 மெட்ரிக் டன்னை அதன் பிறகு மொத்தம் 38.9 மெட்ரிக் டன் கச்சா எண்ண்ய் ஏற்றுமதி செய்து ஈராக் முன்னணிக்கு வந்துள்ளது. இந்த 2017-18 இன் பத்து மாத எண்ணெய் இறக்குமதியை அடிப்படையாகக் கொண்டு இந்த தகவல் அளிக்கபட்டுள்ளது. இந்தியா இந்த 10 மாதங்களில் 184.4 மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது
ஈராக் மற்றும் சவுதி அரேபியாவை தொடர்ந்து ஈரான் 18.4 மெட்ரிக் டன்னுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. வெனிசுலா 15.5 மெட்ரிக் டன்னுடன் நான்காம் இடத்திலும் நைஜீரியா 14.9 மெட்ரிக் டன்னுடன் ஐந்தாம் இடத்திலும் உள்ளன. ஒரு காலத்தில் இந்தியாவுக்கு அதிக கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்த குவைத் நாடு தற்போது 10.2 மெட்ரிக் டன்னுடன் பின் தங்கி உள்ளது” என அந்த பதிலில் குறிப்பிடப் பட்டுள்ளது.