மியூனிச்: ஐஎஸ்எஸ்எஃப் துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை போட்டியில், கலப்பு போட்டிகளில், இந்தியர்கள் 2 தங்கப் பதக்கங்கள் மற்றும் வெள்ளிப் பதக்கங்கள் வென்ற நிலையில், பதக்கப் பட்டியலில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.

வியாழக்கிழமை வரையான நிலவரப்படி, இந்தியா சீனாவை பின்னுக்கு தள்ளியுள்ளது. சீனா தனது கணக்கில் 2 தங்கப் பதக்கங்கள் மற்றும் 2 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களுடன் இரண்டாமிடம் வகிக்கிறது.

கடந்த 3 தொடர்ச்சியான உலகக் கோப்பைகளில், பதக்கப் பட்டியலில், சீனாவை முந்தி, இந்தியா முதலிடம் பெறுவது இதுவே முதன்முறையாகும்.

10 மீட்டர் ஏர் ரைஃபிள் கலப்பு பிரிவில், இந்தியாவின் அஞ்சும் மெளத்கில் மற்றும் திவியன்ஷ் சிங் பவார் ஆகியோர், தங்களின் சக நாட்டு இணையான அபூர்வி சண்டேலா மற்றும் தீபக் குமார் ஆகியோரை தோற்கடித்து தங்கப்பதக்கம் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.