இந்தியாவிலேயே அதிகம் ஊதியம் பெறும் பெண் செயல் அதிகாரி என்ற பெருமையை, தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டிருப்பவர் யார் தெரியுமா?
– அவர், சன் குழுமத்தின் இயக்குநர் கலாநிதி மாறனின் மனைவி காவேரிதான்.
சமீபத்தில் எடுக்கப்பட்ட சர்வே முடிவுகளின்படி,இந்தியாவில் அதிகம் சம்பளம் பெறும் செயல் அதிகாரிகளின் பட்டியலில் இரண்டு பெண்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். அவர்களில் காவேரி கலாநிதிமாறன் முதல் இடத்திலும், ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் செயல் அதிகாரியான ரேணு சூட் கர்நாட் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
தற்போதைய சூழலில் காவேரி கலாநிதிமாறன் ஒரு ஆண்டுக்கு 71.5 கோடி ரூபாய் சம்பளம் பெற்று வருகிறார். 2012-ஆம் ஆண்டு 57 கோடி ரூபாய் பெர்று வந்தார்.
இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பெனின்சுலா லேண்ட் நிறுவனத்தின் தலைவர் உர்வி ஏ பிரமல் 7.3 கோடி ரூபாயும்,அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியான பிரீதா ரெட்டி 6.9 கோடி ரூபாயும் ஆண்டு சம்பளமாக பெற்று வருகிறார்கள்.
Patrikai.com official YouTube Channel