டோக்கியோ:
டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு போதிய உணவு கூட இந்திய விளையாட்டுத்துறை வழங்கவில்லை என பயிற்சியாளர் குற்றம்சாட்டியுள்ளார்.
நீரஜ் சோப்ராவின் பயிற்சியாளர் உவே ஹான் இந்திய விளையாட்டுத்துறை மீது அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு இந்திய விளையாட்டு ஆணையம், தடகள சம்மேளனம் தங்களுக்கு எந்த ஒரு உதவியையும் செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், விளையாட்டு வீரர்களுக்கு உயர்தர உணவையும் கொடுக்கவில்லை. தமக்கு ஒத்துவராத விதிமுறைகளை ஏற்றுக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு இந்திய அதிகாரிகள் மிரட்டினர். நீரஜ் சோப்ரா ஒலிம்பிக்கில் பங்கேற்க அரசு தரப்பில் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்று கூறிய அவர், ஆசிய மற்றும் மாமன்வெல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றதால் அவரை JSW நிறுவனமே ஸ்பான்சர் அளித்து உதவியது என்று தெரிவித்துள்ளார்.