புதுடெல்லி:
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
அதேபோல் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்வோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.