அயோத்தி :

த்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல்-அமைச்சராக பதவி ஏற்றார்.

அப்போது முதல் தீபாவளி பண்டிகையின் போது அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரையில் அகல் விளக்குகள் ( மண் சட்டி விளக்குகள்) ஏற்றப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு அங்கு, தீபாவளி பண்டிகையின் போது நான்கு லட்சத்து 10 ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. இது, உலக சாதனை புத்தகமான கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவானது.

இந்த ஆண்டு தீபாவளி திருநாளை முன்னிட்டு சரயு நதிக்கரையில் ஆறு லட்சத்து 6 ஆயிரத்து 569 அகல் விளக்குகள் நேற்று இரவு ஏற்றப்பட்டன.

முதல் அகல் விளக்கை முதல்-அமைச்சர் யோகி ஆதித்யநாத் ஏற்றி வைத்தார். ஆளுநர் ஆனந்தி பென் படேல் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இங்கு மட்டுமல்லாமல்,அயோத்தி நகரில் உள்ள அனைத்து கோயில்களிலும், மடங்களிலும் அகல் விளக்குகள் ஏற்றபட்டன. இதனால் அயோத்தி நகரமே, ஜொலித்தது.

இந்த நிகழ்வை கின்னஸ் சாதனை புத்தக குழுவினர் பதிவு செய்துள்ளனர்.

அங்குள்ள ராம் மனோகர் லோகியா பல்கலைகழக மாணவர்கள் 8 ஆயிரம் பேர், இந்த நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பை செய்திருந்தனர்.

– பா. பாரதி