தராபாத்

ந்தியாவில் முதல் முறையாக ஐதராபாத் நகரில் ஆண் ஓரினச் சேர்க்கையாளர்கள் பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்திய குற்றவியல் சட்டம் 377 பிரிவின் கீழ் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது, இயற்கைக்கு மாறான உடலுறவு குற்றமாகும் ‘ கடந்த 2009 ஆம் ஆண்டு இந்தச் சட்டப் பிரிவு சட்டவிரோதமானது’ டில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. உச்சநீதிமன்றத்தில் இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், ஓரினச் சேர்க்கை குற்றமல்ல. ஓரின சேர்க்கைக்கு எதிரான 377 சட்டம் ரத்து செய்யப்படுகிறது என குறிப்பிட்டுள்ளது

கடந்த 2018 ஆம் ஆண்டு அதன்படி. 377வது சட்டப்பிரிவு நீக்கப்படுவதாக 5 நீதிபதிகள் அமர்வு ஒருமித்த தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பு வெளியானது.  இதையொட்டி தற்போது இந்தியாவில் முதன் முறையாக ஆண் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தெலுங்கானாவைச் சேர்ந்த ஓரினச் சேர்க்கை தம்பதிகள் அபெய் தாங்கே(வயது 34), சுப்ரியோ சக்ரவர்த்தி (வயது 31) ஆகிய இருவரும் 2012 ம் ஆண்டு ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலம் நட்பை வளர்த்துக் கொண்டனர். இவர்கள் கடந்த எட்டு ஆண்டுகளாகத் தம்பதிகளாக வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் இருவரும் கடந்த சனிக்கிழமை( (டிச.18) ஐதராபாத் நகரில் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தில் இருவீட்டாரின் பெற்றோர்களும், நண்பர்களும் பங்கேற்றனர். தம்பதிகள் தங்கள் திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளனர்.