மும்பை: இந்தியாவின் முதல் டபுள் டெக்கர் பேருந்து மும்பையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பேருந்து சேவைகள் விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த பேருந்து, BKC – குர்லா வழித்தடத்தில் இன்னும் ஓரிரு நாளில் சேவையை தொடங்கும் என்றும், மும்பையில் உள்ள பிராந்திய போக்குவரத்து நிறுவனம் பேருந்திற்கான பதிவு செயல்முறையை இன்னும் முடிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மிகவும் சில நகரங்களில் இப்போதும் இவ்வாறான டபுள்-டக்கர் பேருந்துகள் இயங்கி கொண்டிருக்கின்றன என்றாலும், நமது சென்னை உள்பட பல மாநிலங்களில் ஏற்கனவே செயல்பட்டு வந்த டபுள்டக்கர் பேருந்து சேவை தற்போது பயன்பாட்டில் இல்லை. தற்போது மாசு காரணமாக, மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டு வரும், ஸ்விட்ச் மொபைலிட்டி நிறுவனம் இந்தியாவில் முதல் மற்றும் தனித்துவமான எலக்ட்ரிக் டபுள்-டக்கர் பேருந்தை, ஸ்விட்ச் இஐவி 22 என்ற பெயரில் மத்திய போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி முன்னிலையில் கடந்த 2022 ஜூன் மாதத்தில் ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்தது.
‘தற்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்ப அட்வான்ஸான எலக்ட்ரிக் தொழிற்நுட்பத்தில் ஏசி வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் டபுள்-டக்கர் பேருந்து ஆனது தொடர்ந்து அதிகரித்துவரும் நகர்புற மக்கள் தொகை அதிகரிப்பை சமாளிக்கும் வகையில் அதிக அளவில் தயாரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மகாராஷ்டிரா அரசு முதல் எலக்ட்ரிக் டபுள்டெக்கர் பேருந்தை இயக்க உள்ளது. இது இந்தியாவிலேயே முதன்முறையாக இயக்கப்படும் இரு அடுக்கு பேருந்து என்ற பெயரை பெற்றுள்ளது. அகலமான ஜன்னல் கண்ணாடிகளை கொண்டுள்ள இந்த எலக்ட்ரிக் டபுள்-டக்கர் பேருந்தில் 2வது தளத்திற்கு செல்வதற்கான படிக்கட்டுகள் பேருந்திற்கு முன் மற்றும் பின்பகுதிகளில் உள்ளன. எடை குறைவான அலுமினியத்தால் இந்த பேருந்து உருவாக்கப்பட்டு இருந்தாலும், அதிக எண்ணிக்கையில் பயணிகளை இந்த பேருந்தில் ஏற்றி கொள்ளலாமாம். அதாவத, இந்த டபுள்-டக்கர் பேருந்தில் மொத்தம் 90 இருக்கைகள் உள்ளன. இலகுவான குஷன் உடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஒவ்வொரு இருக்கைகளுடனும் ஸ்விட்ச் இஐவி22 பேருந்தின் கேபின் ஆனது நமக்கு காரின் கேபின் போன்றதான தோற்றத்தை வழங்குகிறது.
இந்த பேருந்தில் இந்த பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு ட்யூவல் கன் சார்ஜிங் சிஸ்டத்தை ஸ்விட்ச் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதன் மூலமாக பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 250கிமீ தொலைவிற்கு இயக்கி செல்ல முடியும். இந்த எலக்ட்ரிக் டபுள்-டக்கர் பேருந்தை மொத்தம் 200 யூனிட்கள் தயாரித்து வழங்க கோரி ஏற்கனவே மும்பை மாநகராட்சியிடம் இருந்து ஸ்விட்ச் மொபைலிட்டி நிறுவனத்திற்கு ஆர்டர் வந்துள்ளது.
அதன்படி முதல் பேருந்து இன்று மும்பையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பேருந்து இன்னம் ஓரிரு நாளில் தனது சேவையை முழுமையாக தொடங்க உள்ளது. மும்பையில் உள்ள பிராந்திய போக்குவரத்து நிறுவனம் மின்சார பேருந்திற்கான பதிவு செயல்முறையை இன்னும் முடிக்கவில்லை, மேலும் புதிய வாகனம் வணிக நடவடிக்கைகளைத் தொடங்க இரண்டு முதல் மூன்று நாட்கள் ஆகலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அனைத்து அனுமதிகளும் கிடைத்தவுடன், பேருந்து குர்லா பேருந்து நிலையம் மற்றும் பாந்த்ரா-குர்லா வளாகம் (BKC) இடையே இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பேருக்கான கட்டணம் குறைந்த பட்சம் ரூ.5 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 5 கிமீ தூரத்திற்கு குறைந்தபட்ச கட்டணம் 6 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்து.
இந்த இஐவி22 எலக்ட்ரிக் டபுள்-டக்கர் பேருந்தை மும்பையை தொடர்ந்து இந்தியாவின் மற்ற முக்கிய மாநகரங்களுக்கும் கொண்டு செல்வதில் ஸ்விட்ச் நிறுவனம் முனைப்புடன் உள்ளது.